வாக்காளர் பட்டியலை சீர் செய்ய மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்

வாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் என மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் திடீர் கடிதம் அனுப்பியுள்ளது.

வாக்காளர் பட்டியலை சீர் செய்ய, அவர்களின் ஆதார் எண்ணை வாக்காளர் ஆட்டையுடன் இணைக்க வேண்டும். இதற்கு வாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டு பெற தங்களுக்கு ஆதிகாரம் வேண்டும் என தேர்தல் ஆணையம், மத்திய அரசின் சட்ட அமைச்சகத்துக்கு திடீர் கடிதம் ஒன்றை எழுதி உள்ளது. அந்த கடிதத்தில் வாக்காளர்கள் ஆவதற்கு புதிதாக விண்ணப்பிப்பவர்களிடமும், ஏற்கனவே வாக்காளர்களாக உள்ளவர்களிடமும் ஆதார் எண்களை கேட்டுப் பெறுவதற்கு சட்டப்பூர்வ அனுமதி வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ற வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை திருத்த வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் வலியுறுத்தி உள்ளது.

Exit mobile version