வங்கதேசத்தில் டிசம்பர் 23-ம் தேதி பொதுத் தேர்தல்- தேர்தல் ஆணையம் அறிவிப்பு

வங்கதேசத்தில் டிசம்பர் 23-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வங்க தேசத்தில் சேயிக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி ஆட்சியில் உள்ளது. முன்னாள் பிரதமர் கலிதா ஜியா ஊழல் வழக்கில் சிறையில் உள்ள நிலையில் டிசம்பர் 23-ம் தேதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த தேர்தலில் முதல் முறையாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணைய தலைவர் நுருல் ஹூடா தெரிவித்துள்ளார். மேலும் நேர்மையான மற்றும் வெளிப்படையான தேர்தல் நடத்தப்படும் என்றும், இந்த தேர்தலில் அனைத்து கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வரும் 19-ம் தேதிக்குள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் ஹூடா தெரிவித்துள்ளார்.

Exit mobile version