தேர்தல் நடத்தை விதிமுறைகளையடுத்து அதிமுகவினர் அரசு அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்படுவதையடுத்து அதிமுக சட்டமன்ற அலுவலகம் மற்றும் சுவரொட்டிகளை அரியலூர் அதிமுகவினர் தாமாக முன்வந்து அகற்றினர்.

தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.இதனையடுத்து அரியலூர் மாவட்டத்தில் அதிமுகவினர் சட்டமன்ற அலுவலகம் உள்ளிட்ட பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அதிமுகவின் விளம்பர பேனர்கள் மற்றும் சுவரொட்டிகளை கட்சியினர் தாமாக முன் வந்து அகற்றி தேர்தல் அதிகாரிகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பு தந்தனர்.

Exit mobile version