ஓய்ந்தது 6ம் கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம்

மக்களவை தேர்தலின் 6ஆம் கட்ட வாக்குப்பதிவு டெல்லி உள்ளிட்ட 7 மாநிலங்களில் 59 தொகுதிகளுக்கு நாளை நடைபெற உள்ளது. 17வது மக்களவைக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்துள்ள 5 கட்ட வாக்குப்பதிவுகளில் சராசரியாக 67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இதனிடையே பீகார், அரியானா, ஜார்கண்ட், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், டெல்லி ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 59 மக்களவை தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி நேற்றுமாலையுடன் அங்கு பிரசாரம் நிறைவடைந்தது.

Exit mobile version