தனியார் கல்லூரியில் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சேலத்தில் இளம் வாக்காளர்கள் நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தும் விதமாக கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ரோகிணி கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். வாக்களிப்பதில் பெருமை கொள்வோம் என்ற வாசகத்தை சுற்றி இந்தியா வரைபடம் வடிவில் மாணவர்கள் அணிவகுத்து நின்றனர். மேலும் வாக்களிக்கும் ஆர்வத்தை தூண்டும்விதமாக மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தின் மாதிரியை காட்சிக்கு வைத்திருந்தனர். அப்போது அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் ரோகிணி, இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட 15 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்காத வண்ணம் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Exit mobile version