நாகையில் அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்களை அகற்றப்படாமல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் வருவதையொட்டி நாகை புதிய பேருந்து நிலையத்தில் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் மற்றும் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பிரச்சார வாகனத்தில் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு குறும்படங்கள் பொதுமக்களுக்கு காண்பிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார், தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் படி அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும், பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.