குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட இருக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
வெளியுறத்துறை செயலாளராக இருந்த ஜெய்சங்கரை, மத்திய அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக நியமித்து அனைவரையும் பிரதமர் நரேந்திர மோடி வியப்பில் ஆழ்த்தினார். கடந்த மே 30-ஆம் தேதி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட ஜெய்சங்கர், 6 மாதத்திற்குள் மக்களவை அல்லது மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டால் மட்டுமே அமைச்சராக தொடர முடியும். அவரை குஜராத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்ய பாஜக தலைமை முடிவு செய்தது. இதனையடுத்து காந்திநகரில் உள்ள சட்டப்பேரவைக்கு சென்ற ஜெய்சங்கர், அங்கு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் உடனிருந்தனர்.