திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், சாதிச்சான்றிழ் கோரி நடைபெற்ற போராட்டத்தில், 83வயது முதியவர் கழுத்தை அறுத்துக் கொண்டதால் பரபரப்பு நிலவியது.
திருவள்ளூர் மாவட்ட பழங்குடி கொண்டா ரெட்டீஸ் மலைஜாதி முன்னேற்ற சங்கத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 200பேர், சாதிச் சான்றிதழ் வழங்கக்கோரி, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு, உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ள வந்தனர்.
ஆனால் அவர்களை அனுமதிக்காமல் போலீசார் விரட்டியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது அங்கு வந்த வருவாய் கோட்டாட்சியர் போராட்டக்காரர்களிடம், 2மணி நேரம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.
அப்போது, போராட்டத்திற்கு வந்த 83வயது முதியவர் பெரியசாமி, திடீரென்று கையில் இருந்த கத்தியால் கழுத்தை அறுத்துக்கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக அங்கிருந்த காவல்துறையினர் முதியவரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
ஜாதி சான்றிதழ் வழங்கவில்லை என்று அதிர்ச்சியால் முதியவர் இந்த செயலில் ஈடுபட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.