கோவை மாவட்டத்தில் முதியவர் ஒருவர் தமிழ் மொழிப்பற்றின் காரணமாக தமிழ் எழுத்துகளுடன் கூடிய கடிகாரங்களை தயாரித்து வருவது அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த 82 வயது தமிழ் ஆர்வலர் மாரியப்பன். பிறமொழி கலப்பின்றி தமிழ் பேசும் வழக்கம் கொண்ட இவர், 3ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். தன் மொழிப்பற்றை வெளிப்படுத்தும் வகையில், தமிழ் எண்களுடன் கூடிய சுவர் கடிகாரங்களை தயாரிப்பதை வழக்கமாக்கி கொண்டுள்ளார். கடிகாரங்களில் 1 முதல் 12 வரை உள்ள ரோமானிய எண்களுக்கு பதில் தமிழ் எழுத்துக்கள் இடம் பெற்றுள்ளன. க – ஒன்று, உ – இரண்டு என துவங்கி கஉ 12 வரை, தமிழ் எண்கள் இடம் பெற்றுள்ளன. 8 ஆண்டுகளாக தமிழ் கடிகாரங்கள் தயாரித்து வருவதாகவும் இவை விற்பனைக்கு அல்லாமல் தமிழ் ஆர்வலர்களுக்கு பரிசளித்து வருவதாகவும் அவர் கூறினார்.