இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனை எய்லீன் ஆஷ், நேற்று தனது 107வது பிறந்தநாளை கொண்டாடினார். எய்லீன் ஆஷ் கடந்த 1911ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி லண்டன் ஹைபரியில் பிறந்தார்.இவர் எய்லீன் ஆஷ் என்றும் அழைக்கப்படுகிறார், எய்லின் வீலன் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் ஒரு ஸ்பெஷலிஸ்ட் பவுலர். இங்கிலாந்தின் பெண்கள் கிரிக்கெட் அணியில் 1937ஆம் ஆண்டு அறிமுகமான இவர், 12 ஆண்டுகளில் 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 10 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.இங்கிலாந்து மகளிர் கிரிகெட், மிடில்செக்ஸ் மகளிர் அணி, சவுத் மகளிர் அணிக்காக ஆடியுள்ளார்.
இவர் தான் உலகிலேயே மிகவும் வயதான டெஸ்ட் கிரிக்கெட் வீரங்கனை ஆவார். எய்லீன் தற்போது வரை ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணம், கடந்த 30 ஆண்டுகளாக அவர் செய்து வரும் யோகாப் பயிற்சி தான் என்று கூறுகிறார். இந்நிலையில் இவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஐ.சி.சி, தற்போதைய இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைவர் ஹீதர் நைட்டுடன் இணைந்து எய்லீன் யோகா செய்யும் வீடியோவையும் வெளியிட்டுள்ளது.
The oldest living Test cricketer turns 107 today! ?
Eileen Ash debuted for England in June 1937 – current skipper @Heatherknight55 caught up with her earlier this year for a spot of yoga! ?♀️ pic.twitter.com/6QEN5YMlcm
— ICC (@ICC) October 30, 2018