காஷ்மீரில் இந்திய பாதுகாப்பு படையினரால் லஷ்கர் அமைப்பை சேர்ந்த 8 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள சோபோர் மாநிலத்தில் நேற்றிரவு இந்திய பாதுகாப்பு படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 8 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்பகுதியில் வசிக்கும் மக்களை அச்சுறுத்தும் விதமாக சுவரொட்டிகளை ஒட்டியதையடுத்து அவர்கள் 8 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து கணினி, சுவரொட்டி தயாரிப்பு இயந்திரம், துப்பாக்கி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.