எகிப்து மற்றும் பர்படோஸ் தேசம் பற்றிய செய்தி தொகுப்பு

உல்லாச உலகம் பகுதியில் இன்று மர்மதேசம் எகிப்து மற்றும் அழகிய தேசம் பர்படோஸ் குறித்து விபரம் இதோ…

ஆப்பிரிக்க கண்டத்தின் வடகோடியில் இருக்கும் தேசம் எகிப்து.. 1922 ல் பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்ற இந்நாட்டில் சர்வாதிகார ஆட்சி நிலவியது.. அதை தொடர்ந்து ஏற்பட்ட புரட்சியின் விளைவாக தற்போது அதிபர் தலைமையிலான ஜனநாயகம் தழைத்துள்ளது. 10 லட்சம் சதுர கி.மீ. பரப்பு கொண்ட இந்நாட்டில், ஒன்பதரை கோடி பேர் வசிக்கிறார்கள். வட ஆப்பிரிக்காவில் ஒரு முக்கிய நாடாக விளங்கி வரும் எகிப்தில், 97 சதவிகித நிலப்பகுதி வறண்ட பாலைவனமே..

நைல் நதியின் கரையோர பகுதிகள் மற்றும் கடலில் கலக்கும் டெல்டா பகுதிகளில் மட்டுமே பசுமை காணப்படுகிறது. நைல் நதி கடலில் கலக்கும் இடம் தான் தலைநகர் கெய்ரோ… நைலையொட்டிய பகுதிகளில் மட்டுமே 99 சதவிகித மக்கள் வசிக்கிறார்கள்… நைல் நதியில், சொகுசுப்படகு போக்குவரத்து அதிக வரவேற்பை பெறுகிறது.

எண்ணெய் உற்பத்தி, சுற்றுலா, விவசாயம் போன்றவை முக்கிய வருவாய்த்துறைகளாக உள்ளன. இங்குள்ள நைல் நதி, பிரமிடுகள் உள்ளிட்டவற்றை பார்க்க ஆண்டுதோறும் கோடிக்கணக்கானோர் இங்கே குவிகிறார்கள்.. ஒட்டகங்களின் மீது அமர்ந்து பிரமிடுகளை சுற்றிப்பார்க்க வெளிநாட்டவர்கள் அதிக அளவில் விரும்புகிறார்க்ள..

அடுத்ததாக நாம் பார்க்கும் நாடு Barbados… இது ஒரு மேற்கிந்திய தீவு ஆகும்.. அலுவல் மொழி ஆங்கிலம். இங்கே இரண்டரை லட்சம் பேர் தான் வசிக்கிறார்கள்… அழகான தீவாக காட்சியளிக்கும் Barbados, ஒரு மிக வளர்ந்த நாடாக இருக்கிறது.. பிரிட்டிஷிடம் இருந்து 1966 ல் விடுதலை பெற்ற இந்நாட்டிற்கு பிரிட்டன், அமெரிக்கா, கனடாவில் இருந்து ஏராளமானோர் சுற்றுலா வருகிறார்கள்.. பிரிட்டன் ஆதிக்க காலத்தில் ஆப்பிரிக்காவில் இருந்து ஏராளமானோர் அங்கே அடிமைகளாக பிடித்துச்செல்லப்பட்டனர். ஆகவே,அவர்களின் வம்சாவளிகளே நிறைந்திருக்கிறார்கள்… இந்தியர்கள் கூட சில நூறு கணக்கில் அங்கே உள்ளனர்… சுற்றுலா, மருந்து மற்றும் மது தயாரிப்பு உள்ளிட்டவை முக்கிய தொழில்களாக உள்ளன..
இந்நாட்டுக்கொடியில் சூலாயுதம் இருப்பது ஆச்சர்யத்தை தருகிறது.

Exit mobile version