ஊரடங்கு காரணமாக முட்டை கொள்முதல் விலை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஒரு ரூபாய் வரை குறைந்துள்ளது

கொரோனா பரவலை தொடர்ந்து போடப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக முட்டை கொள்முதல் விலை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஒரு ரூபாய் வரை குறைந்துள்ளது.

நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப் பண்ணைகள் மூலம் நாள்தோறும் 4 கோடியே 25 லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

நாமக்கல்லில் இருந்து தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களுக்கும் முட்டைகள் அனுப்பப்படுகின்றன.

கடந்த 21 ஆம் தேதி தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு, முட்டை ஒன்றின் கொள்முதல் விலையை 4 ரூபாய் 85 காசுகளாக நிர்ணயித்தது.

கடந்த ஒரு வாரத்தில் முட்டை கொள்முதல் விலை படிப்படியாக சரிந்து வருகிறது.

இந்த நிலையில் இன்றும் முட்டை விலை மேலும் 30 பைசா குறைந்து 3 ரூபாய் 85 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் முட்டை விலை ஒரு ரூபாய் குறைந்துள்ளதாகவும், இதன் மூலம் 30 கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் பண்ணையாளர்கள் கூறுகின்றனர்.

உணவகங்கள், தங்கும் விடுதிகள் மூடப்பட்டதாலும், வெளிமாநிலங்களில் முழு நேர ஊரடங்கு காரணமாகவும் முட்டைகள் தேக்கம் அடைந்து இருப்பதால் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version