மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் சார்பில் இந்தியாவில் உள்ள டாப் கல்லூரிகளின் பட்டியல் வெளியாகியிருக்கு… இதுல ஒட்டுமொத்த உயர்கல்வி நிறுவனங்களிலும் சென்னை ஐ.ஐ.டி. நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது.சென்னை ஐ.ஐ.டி. தொடர்ந்து 5வது முறையாக முதலிடத்தை தக்க வைத்துள்ளது.
டாப் டென் பல்கலைக்கழகங்களில் கோவையில் உள்ள அமிர்த விஷ்வா வித்யா பீடம் 7 வது இடத்தையும், வேலூர் வி.ஐ.டி 8வது இடத்தையும் பிடித்துள்ளன. சென்னை பிரசிடென்ஸி கல்லூரி டாப்டென் கல்லூரியில் 3வது இடத்தையும், 4வது இடத்தை கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரியும், சென்னை லயலோ கல்லூரி 7வது இடத்தையும் பிடித்துள்ளது. ஆராய்ச்சி நிறுவனங்களில் சென்னை ஐ.ஐ.டி. 2வது இடத்தில் உள்ளது. வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.
உயர்கல்விகளில் மாணவர்கள் சேர்க்கை விகிதம், தேர்ச்சி விகிதம் இவற்றைக் கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கை சதவிகிதம் எனப்படும் Gross enrollment ratioல் இந்திய மாநிலங்களையும், ஏன், உலகநாடுகள் பலவற்றையுமே பின்னுக்குத் தள்ளி முதலிடம் வகிக்கிறது தமிழகம்…
தேசிய அளவில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கையில், உயர்கல்வி சேர்க்கை எனப்படும் Gross enrollment ratioவை 2035ஆம் ஆண்டுக்குள் 50 சதவீதமாக உயர்த்துவது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த இலக்கை அதிமுக ஆட்சியில் எடப்பாடி கே.பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோதே அதாவது, கடந்த 2019லேயே தமிழகம் பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில்தான் பள்ளிப்படிப்பை முடித்தவர்களில் மொத்தம் 49 சதவீதம் பேர் கல்லூரியில் சேர்கிறார்கள். விலையில்லா மிதிவண்டி, விலையில்லா மடிக்கணிணி என்று பள்ளிக்குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட கல்வி மற்றும் மாணவர்கள் நலன்சார்ந்த நடவடிக்கைகளே இந்த சாதனைகளுக்கு முழுமுதற் காரணம்.
இதுமட்டுமல்ல, அதிமுக ஆட்சியில்தான் கலை அறிவியல் கல்லூரிகள், 7 சட்டக்கல்லூரிகள், 11 மருத்துவக்கல்லூரிகள், வேளாண் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் என்று உருவாக்கப்பட்டதோடு,வறுமையில் உள்ள மாணவர்களும் குறைந்த கட்டணத்தில் கல்வி கற்க வழி வகுக்கப்பட்டது. 2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்தபோது உயர்கல்வி பெறும் மாணவர்களின் சதவீதம் வெறும் 32 ஆகத்தான் இருந்தது. பின்னர் அதிமுக ஆட்சியில் கல்வித்துறைக்கு அதிக முக்கியத்தும் அளித்ததோடு அதிக நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டதன் காரணமாக நாட்டிலேயே அதிக மாணவர்கள் உயர்கல்வி பெறும் மாநிலமாக வளர்ந்திருக்கிறது நம் தமிழகம். மத்திய அரசு 2035ஆம் ஆண்டு நிர்ணயித்த இலக்கினை, 2019லேயே அதிமுக ஆட்சியிலேயே அடைந்துள்ளது.
அதிமுக ஆட்சியின் முன்னெடுப்புகளாலேயே இன்று இந்தியாவில் மட்டும் அல்ல, உலக அளவிலும் வளர்ந்த நாடுகளின் Gross enrollment ratioவை தமிழகம் விஞ்சியிருக்கிறது. சீனாவின் ஜிஇஆர் சதவிகிதம் 43%. மலேசியாவின் ஜிஇஆர் சதவிகிதம் 45%. பஹ்ரைனின் ஜிஇஆர் சதவிகிதம் 47%. இப்படி வளர்ந்த நாடுகளை விட தமிழகம் 49 சதவிகிதம் பெற்றும் முன்னணியில் உள்ளது.
இந்த பெருமையும் புகழும் அதிமுக ஆட்சியின் செயல்பாடுகளாலேயே சாத்தியமாகி இருக்கிறது. ஆனாலும், வழக்கம் போல திமுக இதற்கும் தன்னுடைய ஸ்டிக்கரை ஒட்டியிருக்கிறது… என்னத்த சொல்ல…
Discussion about this post