இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான கல்வி கவுன்சில் கூட்டம்

டெல்லியில் 5வது இந்தியா, ஆஸ்திரேலியா இடையே   கல்வி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.

டெல்லியில் 5வது ஆஸ்திரேலியா – இந்தியா கல்வி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க், ஆஸ்திரேலிய கல்வி அமைச்சர் ஸ்ரீ டான் தெஹானுடன் இரு தரப்பு கல்வி கொள்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் போக்ரியால், STUDY IN INDIA திட்டம் சர்வதேச மாணவர் சமூகத்திற்கு தரமான கல்வியை வழங்குவதையும், சர்வதேச மன்றத்தில் இந்திய கல்வி முறையை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார்.

தரமான கல்வி, அனைவருக்கும் வாழ்நாள் முழுவதும் கற்றல் வாய்ப்புகளை ஊக்குவித்தல் மற்றும் கல்வி ஒத்துழைப்பின் முக்கியமான பிரச்சினை குறித்து விவாதிக்க இந்தியாவுக்கு வருகை தந்த ஆஸ்திரேலிய கல்வி அமைச்சருக்கு, இந்தியா சார்பில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.

Exit mobile version