கூட்டுறவு சங்கங்களின் தலைவர், துணைத் தலைவர் செய்யும் தவறுகளுக்கு தண்டனை விதிக்கும் சட்டத் திருத்த மசோதா, சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
2020ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் திருத்த சட்ட முன்வடிவை, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தாக்கல் செய்தார். கையாடல், மோசடி மற்றும் தவறான நடத்தைகளுக்கு, கூட்டுறவு சங்க அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பது போல், கூட்டுறவு சங்கங்களின் தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் செய்யும் தவறுகளுக்கு நடவடிக்கை எடுக்கும் சட்டம் தற்போது இல்லை. அமைச்சர் தாக்கல் செய்துள்ள சட்ட முன்வடிவு மூலம், முறைகேட்டில் ஈடுபடும் கூட்டுறவு சங்கங்களின் தலைவர், துணைத் தலைவரை தற்காலிக பதவி நீக்கம் செய்ய, பதிவாளர் ஆணையிடலாம். இதேபோல், 2020ஆம் ஆண்டு தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக திருத்த சட்ட முன்வடிவை, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேரவையில் தாக்கல் செய்தார்.