இடைத்தேர்தலுக்கு பிறகு தமிழக சட்டப்பேரவையின் பலம்

இடைத்தேர்தலுக்கு பிந்தைய தமிழக சட்டப்பேரவையின் பலம் குறித்து தற்போது பார்க்கலாம்..

ஆட்சி நிலைக்காது நிலைக்காது என நிற்காமல் கத்திக்கொண்டிருந்த திமுகவுக்கும் துரோகிகளுக்கும் சம்மட்டி அடிபோல் இடைத்தேர்தல் முடிவுகளை அளித்துள்ளனர் தமிழக மக்கள். இரவிலும் பகலிலும் முதலமைச்சர் கனவில் மிதக்கும் உளறல் புகழ் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அது நடக்கவே நடக்காது என சொல்லுகிறது இந்த கணக்கு…

தமிழக சட்டப்பேரவையின் மொத்த பலம் 234… இதில் ஆட்சியமைக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவை… தற்போதைய இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற 9 தொகுதிகளையும் சேர்த்து அதிமுகவின் பலம் சபாநாயகர் தனபால், தமீம் அன்சாரி, தனியரசு, கருணாஸ் உட்பட123 ஆகும்… ஆனால் முதலமைச்சர் கனவில் கிராமம் கிராமமாக வலம் வந்த மு.க.ஸ்டாலினின் திமுகவுக்கு 101 எம்.எல்.ஏக்களின் பலம் மட்டுமே இருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு 8 எம்.எல்.ஏக்களும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒன்றும், டிடிவி தினகரன் எனும் சுயேட்சை ஒன்றும் உள்ளனர்.

எம்.பி தேர்தலில் வெற்றி பெற்றியிருக்கும் வசந்தகுமார், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதால் அது காலியாகிவிடும்… இதனால் காங்கிரசின் பலம் 7ஆக குறையும்…

இந்தநிலையில் திமுகவுக்கு காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், துரோகத்திற்கு பெயர்போன சுயேட்சையான டிடிவி.தினகரன் ஆகியோர் ஆதரவு அளித்தாலும் கூட கணக்கு 110த்தை தாண்டாது…

Exit mobile version