முதலமைச்சர் பழனிசாமியின் 4ம் கட்ட சூறாவளி பிரசாரம் எப்போது?

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் 4ம் கட்ட சூறாவளி பிரசாரத்தின் அட்டவணை வெளியாகியுள்ளது.

அதன்படி, சனிக்கிழமை போடிநாயக்கனூர் வேட்பாளர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து முதலமைச்சர் பிரசாரம் மேற்கொள்கிறார். அன்றைய தினம், நாகர்கோவில், கன்னியாகுமரி, ராதாபுரம், நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளில் அ.தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி சார்பில் களமிறங்கும் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கவுள்ளார்…

தொடர்ந்து 28-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை, சென்னையில், ராயபுரம், திரு.வி.க நகர், திருவொற்றியூர், ஆர்.கே.நகர், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர், துறைமுகம் ஆகிய பகுதிகளில் அ.தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் நடத்துகிறார்…

அதனையடுத்து, 29-ம் தேதி திங்கட்கிழமை மயிலாப்பூர், தியாகராயநகர், அண்ணாநகர், திருவல்லிக்கேணி, ஆயிரம்விளக்கு, சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், மதுரவாயல், பூந்தமல்லி, அம்பதூர் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடவுள்ளார்…

30-ம் தேதி செவ்வாய் கிழமை திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பிரசாரக் கூட்டத்தில் முதலமைச்சர் கலந்து கொள்கிறார். அதனைத் தொடர்ந்து, 31-ம் தேதி புதன்கிழமை வேளச்சேரி, சோழிங்கநல்லூர், தாம்பரம், பல்லாவரம், ஆவடி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மாதவரம், ஆலந்தூர் ஆகிய பகுதிகளில், அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசமி பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்…

Exit mobile version