எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி அரசியல் பயணத்தை தற்போது பார்ப்போம்
சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் 1954ம் ஆண்டு பிறந்த எடப்பாடி பழனிசாமி, தனது 17வது வயதில் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றத்தில் இணைந்தார்
1974ம் ஆண்டு அதிமுகவில் சேர்ந்த அவர், தனது 18 வயதில் சிலுவம்பாளையம் கிளைச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கட்சியில் தொடர்ந்து தீவிரமாக பணியாற்றி வந்த அவர், 1982ல் எடப்பாடி ஒன்றிய அதிமுக செயலாளரானார்
1985ம் ஆண்டு சேலத்தில் ஜெயலலிதா பேரவையை தொடங்கினார்.
1989 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல்முறையாக சட்டப்பேரவைக்குள் அடியெடுத்து வைத்தார்
1990ம் ஆண்டு சேலம் வடக்கு மாவட்டத்தின் இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்
1991ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், மீண்டும் எடப்பாடி தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டார்
1998ம் ஆண்டு திருச்செங்கோடு மக்களவை தொகுதியில் போட்டியிட்டு எம்.பியானார்.
2001ம் ஆண்டு அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார்
2011ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில், எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் வாகை சூடினார். இதனை தொடர்ந்து நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் அமைச்சராக பொறுப்பேற்றார்
2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்ற எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து 2017ல் முதலமைச்சரானார்
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 3வது முறையாக எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அவர், 93 ஆயிரத்து 802 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் அதிமுக எம் எல் ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்