திமுகவில் உதயநிதி வளர்ச்சிக்கு தடையாக இருப்பவர்களை ஓரங்கட்ட ஸ்டாலின் முயற்சிப்பதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
திருப்பத்தூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மருது அழகுராஜை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அதிமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டு வாக்கு சேகரித்தார். அதிமுக அரசு எந்த நலத்திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என பொய் கூறும் ஸ்டாலின், அதுகுறித்து மேடை போட்டு தன்னுடன் விவாதிக்க தயாரா என சவால் விடுத்தார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றசாட்டுகளை விசாரிக்க தனி நீதிமன்றம் என்ற திமுகவின் அறிவிப்பு, அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகளை மிரட்டுவதற்காக ஸ்டாலின் ஏற்படுத்தியது என விமர்சித்தார்.
திமுக முன்னாள் அமைச்சர்கள் 13 பேர் மீது வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றசாட்டுகளை விசாரிப்பேன் என்பது ஸ்டாலின் கூறுவது வேடிக்கையானது என்றும் தெரிவித்தார். திமுகவில் உதயநிதி வளர்ச்சிக்கு தடையாக இருப்பவர்களை ஓரங்கட்ட ஸ்டாலின் முயற்சிப்பதாக முதலமைச்சர் குற்றம்சாட்டினார்.
Discussion about this post