"செவிலியர் பவானியின் தியாகத்தை வணங்கி அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்" – எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

கொரோனா பாதிப்பால் காலமான சுகாதார செவிலியருக்கு, முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியில் துணை பெருநகர மருத்துவமனையில் நகர சுகாதார செவிலியராக பணியாற்றி வந்தவர் பவானி.

இவர் ஏப்ரல் 22ம் தேதி கொரோனா உறுதியானதால், காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 5 நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பியிருந்தார்.

ஏப்ரல் 28ம் தேதியன்று, அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், பலர் படுக்கை கிடைக்காமல் உயிருக்கு போராடுவதை அறிந்து, தனக்கு கிடைத்த ஆக்சிஜன் படுக்கையை விட்டுக்கொடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த 19ம் தேதி மூச்சுத் திணறல் ஏற்பட்டு செவிலியர் பவானி உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வேதனை அடைந்ததாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இவர்களைப் போன்ற முன்களப் பணியாளர்களின் தியாகங்களினால் மட்டுமே, தமிழகம் காப்பாற்றப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செவிலியர் பவானியின் தியாகத்தை வணங்கி அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாக, தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

Exit mobile version