எடப்பாடியில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் தீமிதி விழா

எடப்பாடியில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் தீமிதி விழா பூச்சாட்டுதலுடன் நடைபெற்றது.

சேலம் மாவட்டத்தில் உள்ள பூலாம்பட்டி என்ற கிராமத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு முதன்மை நிகழ்ச்சியாக அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு கோவில் வளாகத்தில் தீக்குண்டம் எரியூட்டப்பட்டது. காணிக்காரர்கள் முதலில் தீமிதித்தனர். பின்னர் கரககாரர்கள், அவர்களை தொடர்ந்து பொதுமக்கள் தீமித்தனர். மேலும் உடலில் அலகு குத்தி தங்கள் நேர்த்திகடன்களை செலுத்தினர். இந்த விழாவில் ஏராளாமான பொதுமக்கள் கலந்து கொணடு சாமி தரிசனம் செய்தனர்.

Exit mobile version