குடியரசு தினத்தையொட்டி தமிழக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து!

குடியரசு தினத்தையொட்டி தமிழக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், அனைவருக்கும் சம உரிமை, சாமானியருக்கும் சமநீதி, வேறுபாடற்ற சமூகம் போன்ற உயரிய கோட்பாடுகளை கொண்ட இந்திய அரசியலமைப்பு சாசனம் இயற்றப்பட்ட நன்னாளான குடியரசு தினத்தில், மக்களாட்சி மலர பாடுபட்ட மாமனிதர்களின் ஈடு இணையற்ற தியாகங்களை போற்றி வணங்குவதாக தெரிவித்துள்ளார். மேலும், ஜனநாயகம் மலர்ந்த இந்நன்னாளில் அனைவரும் இணைந்து நாட்டின் பலமாய் இருந்து வளர்ச்சியை நோக்கி முன்னேற உழைப்போம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Exit mobile version