அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியின் 69வது பிறந்த நாளை ஒட்டி, கழக அம்மா பேரவை சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரை பாண்டி கோவிலில் சிறப்பு பூஜை செய்தார். அப்போது செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், எதிர்கட்சித்தலைவரின் பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாகவும், ஏழைகளுக்கு நலத்திட்டம் வழக்கு விழாவாகவும் கொண்டாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் விடியா திமுகவின் அமைச்சர் பி.டி.ஆர். தொடர்பான ஆடியோ நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. எனவே அதை திசைத்திருப்பவே தற்போது அமைச்சரவை மாற்றம் நடந்திருப்பதாக குற்றம்சாட்டினார். மேலும் ஆட்சி மாற்றமே இதுபோன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக அமையும் எனவும் தெரிவித்தார்.
Discussion about this post