நாட்டின் 77வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்நாளில் கல்வி, அறிவியல், சமத்துவம் போன்றவற்றில் தொடர்ந்து தலைசிறந்து விளங்கிட அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்திய திருநாட்டின் 77வது சுதந்திர தின கொண்டாட்டத்தில், விடுதலை வேள்வியில் கடும் போராட்டத்தை எதிர்கொண்டு தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த தியாகிகளை போற்றி தலை வணக்குகிறேன் என குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்நன்னாளில் நம் நாடு கல்வி, அறிவியல், சமத்துவம் போன்றவற்றில் தொடர்ந்து தலைசிறந்து விளங்கிட பாடுபட வேண்டும் என்றும், நம் நாட்டின் ஒற்றுமையை பேணி காக்கவும் நாம் உறுதியேற்போம் என்றும் தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, அனைவருக்கும் தனது சுதந்திர தின வாழ்த்துகள் எனவும் பதிவிட்டுள்ளார்.
இந்திய திருநாட்டின் 77வது சுதந்திர தின கொண்டாட்டத்தில், விடுதலை வேள்வியில் கடும் போராட்டத்தை எதிர்கொண்டு, தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த தியாகிகளை போற்றி தலை வணங்குவதுடன்,
இந்நன்னாளில் நம் நாடு கல்வி, அறிவியல், சமத்துவம் போன்றவற்றில் தொடர்ந்து தலைசிறந்து விளங்கிட பாடுபடவும்,… pic.twitter.com/OLLmCiQFwk
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) August 15, 2023
Discussion about this post