ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சேலம் சிறுவனுக்கு தனியார் மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளித்திட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கோவாநயக்கன்பட்டியைச் சேர்ந்த லோகேஷ் என்ற சிறுவன் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
இனியும் மருத்துவ செலவை செய்ய வசதி இல்லை என்றும் சிசிக்சை அளிக்க உதவ வேண்டும் என்றும் நாளிதழ்களில் லோகேஷின் தந்தை சந்திரகுமார் கோரிக்கை விடுத்திருந்ததை பார்த்ததாக முதலமைச்சர் கூறியுள்ளார்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளித்திட சுகாதாரத்துறை அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.