தமிழகம் திரும்பினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

டெல்லியில் நேற்று நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்பினார்.

மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து, டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் புதிய எம்பிக்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், தேனி மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரவீந்திரநாத் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக மோடி தேர்வு செய்யப்படுவதற்கு அதிமுக முழு ஆதரவை வழங்கும் எனத் தெரிவித்தார். இந்நிலையில் டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் பழனிசாமி இன்று காலை சென்னை திரும்பினார்.

Exit mobile version