ஏர் இந்தியாவிற்காக விமானம் வாங்கிய விவகாரத்தில் ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை சம்மன்

ஏர் இந்தியாவிற்காக விமானம் வாங்கிய விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

மன்மோகன்சிங் பிரதமராக இருந்த போது ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக ஏர்பஸ் விமானங்கள் வாங்கப்பட்டன. இதில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை ஏற்கனவே சிபிஐ விசாரணை நடத்தி வந்த நிலையில், அமலாக்கத்துறையும் கையில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், விசாரணைக்காக வரும் 23ஆம் தேதி டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு ப.சிதம்பரத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக ஏர்செல் மேக்சிஸ் விவகாரத்தில் ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் மீதான வழக்கிலும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version