தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் சரிவு ஏற்படவில்லை: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

ஆட்டோ மொபைல் துறையில் சரிவு ஏற்பட்டாலும், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் சரிவு ஏற்படவில்லை என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இந்திய தொழில் வர்த்தக மற்றும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில், மனை வணிக தொழில் மாநாடு மற்றும் விருது வழங்கும் விழா
சென்னை கிண்டியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ரியல் எஸ்டேட் துறையில் சிறப்பாக செயலாற்றிய நிறுவனங்களுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், விருதுகளை வழங்கினார். விழாவில் பேசிய துணை முதலமைச்சர், நகரத்தில் வீடு கட்டுவோர் எளிதில் அனுமதி பெறும் வகையில் வரும் டிசம்பர் மாதம் முதல் ஆன்லைன் முறை நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்தார். ஆட்டோ மொபைல் துறையில் சரிவு ஏற்பட்டாலும், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் சரிவு இல்லை என்று கூறிய துணை முதலமைச்சர், இந்திய பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் இரண்டாம் இடம் வகிப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், வரும் 2023-ஆம் ஆண்டிற்குள் குடிசை இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும் என்றார்.

Exit mobile version