பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

உலகளவில் வறுமையை ஒழிப்பதற்காக ஆய்வு மேற்கொண்ட இந்தியர் உள்பட 3 பேருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

2019ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசினை ஆல்பிரட் நினைவகம் அறிவித்துள்ளது. உலகளவில் வறுமையை ஒழிப்பதற்காக ஆய்வு மேற்கொண்ட இந்தியரான அபிஜித் பானர்ஜி, எஸ்தார் டூஃப்லோ, மைக்கேல் கிரீமர் உள்ளிட்ட 3 பேருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அபிஜித் பானர்ஜி மும்பையை சேர்ந்தவர். தற்போது அவர் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். அபிஜித் பானர்ஜியும், எஸ்தார் டூஃப்லோ ஆகியோர் கணவர் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version