பொருளாதார நெருக்கடியினை சந்தித்துள்ளது பாகிஸ்தான்!

பாகிஸ்தானில் சமீபத்தில் பொருளாதார பெருமந்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருளின் விலை அங்கே கிடுகிடு என்று உயர்ந்துள்ளது. ஆகவே நாட்டிற்குள்ளே ஆங்காங்கே கலவரங்கள் சூழ்ந்த நிலையில் உள்ளது. இப்படியிருக்க தற்சமயம் மின்சாரம் சேவை பாகிஸ்தானில் சிலப் பகுதிகளில் துண்டிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை அன்று மின்சார உற்பத்தி அமைப்பான கிரிட் நிறுவனத்தின் அதிர்வெண் செயலிழந்து காணப்பட்டது. அதனால் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது. முக்கியமாக கராச்சி, இஸ்லாமாபாத் போன்ற முக்கிய நகரங்களில் வாழும் மக்கள் இதனால் மிகுந்த சிரத்தைக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

இந்த மின்சாரத்தடையினால் பாகிஸ்தானின் நாடாளுமன்றம் மூடப்பட்டுள்ளது. மூன்று நாட்கள் இந்த மின்சாரமானது இருக்காது என்று தகவல் வந்துள்ளாதல் நாடாளுமன்றம் மூன்று நாட்கள் பூட்டியே தான் இருக்கும் என்று தகவல் கசிந்துள்ளது. பாகிஸ்தான் செனட் தலைவர் மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் ஆகியோர் உடனடியாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற மாளிகை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்த நிலையில்  திங்கள்கிழமை மாலை 4 மணி முதல் நாடாளுமன்ற வளாகத்தை செனட் செயலகம் மூடியது. செனட் அவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவில், ஜனவரி 26ஆம் தேதி மாலை 4 மணி முதல் காலை 11 மணி வரை நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற இருந்த கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Exit mobile version