சில துறைகளில் பொருளாதார மந்தநிலை சீரடைந்துள்ளது- நிர்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விகிதம் குறைக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

டெல்லியில் நேற்று நடந்த ஒரு மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், நாட்டின் பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். பொருளாதார மந்தநிலையை பொறுத்தவரை அது சில குறிப்பிட்ட துறைகள் சார்ந்தது என்றும், இதில் சில துறைகளில் மந்தநிலை சீரடைந்துள்ளது என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், மக்களிடம் அதிக நிதி கையிருப்புக்காக தனிநபர் வருமான வரி விகிதத்தை குறைக்கும் திட்டமும் உள்ளது என்று கூறினார். இதே போன்று, வரி விதிப்பை அரசு எளிதாக்கி தொல்லையில்லா வரி வசூலை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.

Exit mobile version