ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் தொடரும் என ஐநா பொதுச்சபை கூட்டத்தில் டிரம்ப் தெரிவித்தார்.
ஐநா.வின் 74வது பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் தொடரும் என்று அறிவித்தார். ஆப்கானில் தீவிரவாதத்தை துடைத்தெறியும் வரை கூட்டுப் படைகளுடன் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்வோம் எனவும் அவர் உறுதிபட கூறினார்.
சீனா, உலக வர்த்தக அமைப்பில் இணைந்த பின்பு, அமெரிக்காவில் 60 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டதாக டிரம்ப் தெரிவித்தார். உலகின் பல நாடுகளிலும் சீனப் பொருட்களால் உள்நாட்டு தொழில்கள் நலிவடைந்திருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
பணம் கையாளுதல், அறிவுசார் திருட்டு, தரமற்ற பொருட்களை குவிப்பது, தொழில்நுட்பத்தை அபகரித்தல் போன்ற பல்வேறு செயல்களால் சர்வதேச சந்தைகளை சீனா ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பதாக டிரம்ப் குறை கூறினார்.