இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் வேகம் குறைந்தாலும் பொருளாதார மந்தநிலை எதுவும் ஏற்படவில்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், பல்வேறு காரணங்களினால் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளதை சுட்டிக் காட்டினார். எனினும் பொருளாதார மந்த நிலை எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவித்த அவர், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் பொருளாதார வளர்ச்சியை ஒப்பிடும் போது தற்போது பொருளாதார வளர்ச்சி நன்றாக இருப்பதாகவே தெரிவித்தார். மேலும் அந்நிய நேரடி முதலீடு வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளதாக தெரிவித்தார். காங்கிரஸ் ஆட்சியில் அந்நிய நேரடி முதலீடு 304.2 பில்லியன் டாலராக இருந்ததாகவும் தற்போது 412.6 பில்லியன் டாலராகவும் உள்ளதாகவும் சுட்டிக் காட்டினார்.