பாகிஸ்தான் நாட்டில் தற்போது பொருளாதார நெருக்கடியானது தலைவிரித்து ஆடுகிறது. இஸ்லாமாபாத், கராச்சி போன்ற முக்கிய நகரங்கள் இதனால் கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ளது. இரண்டு தினங்களுக்கு முன்பு கூட மின்சாரம் கசிந்து தீவிபத்து ஆகியிருக்கிறது. இதன் விளைவாக மின்சேவை நிறுத்தப்பட்டிருந்தது. மேலும் பாகிஸ்தான் நாடாளுமன்றம் மூன்று நாட்களுக்கு பூட்டிய வண்ணமே இருந்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானின் பிரதமர் ஷெரிப் தற்போது தேசிய சிக்கன குழு ஒன்றினை நிறுவியுள்ளார். அதன் ஆலோசனைப்படியே பாகிஸ்தானின் பொருளாதாரத்தினைக் கட்டுப்படுத்த சில நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்.
பாகிஸ்தானின் பணவீக்கமானது அதிகரித்துள்ள நிலையில் மிகப்பெரிய சவாலை அந்த நாடு எதிர்கொள்ள வேண்டிய இக்கட்டான கட்டத்தில் சிக்கியுள்ளது. முக்கியமாக மின்சாரத் தேவையினைக் குறைப்பதன் மூலமாக பணத்தை சேமிக்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தானில் உள்ள கடைகள் மற்றும் மால்கள் இரவு பத்து மணிக்கு மேல் செயல்படக்கூடாது என்று உத்தரவு இட்டுள்ளது அந்நாட்டு அரசு. 2253 லட்சம் கோடி வரைதான் கடந்த ஆண்டுவரை பாகிஸ்தானின் கடன் தொகையானது இருந்து வந்தது. தற்போது ஒரே ஆண்டில் 2437 கோடி கடன் தொகையை எட்டியுள்ளது.
இதனால் பாகிஸ்தானின் தேசிய சிக்கனக் குழுவின் ஆலோசனைப் படி பிரதமர் ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதன்படி, அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தொகையானது 10%வும், அமைச்சக செலவினங்கள் 15%வும் கழிக்கப்பட உள்ளன. மேலும் அமைச்சக ஆலோசனை அதிகாரிகள் 78 பேரிலிருந்து 30 பேராக குறைக்கப்பட உள்ளனர். இதன் மூலம் வருடத்திற்கு 6000 கோடி ஈட்ட முடியும் என்று நம்பப்படுகிறது.