வருமான வரித்துறை சோதனை தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை

வருமான வரித்துறை சோதனை தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்துகிறது. மக்களவை தேர்தல் தேதி அறிவித்த பின்னர் பல்வேறு இடங்களிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதில், கணக்கில் வராத பல கோடி ரூபாய் ரொக்கம், ஆவணங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த சோதனைகள் அனைத்தும் பாரபட்சமின்றி நடத்தப்படுவதாக வருவாய்த் தூறை விளக்கமளித்துள்ளது.

இந்நிலையில் சோதனை தொடர்பாக விளக்கமளிக்க, வருவாய் செயலர் ஏ.பி. பாண்டே மற்றும் மத்திய நேரடி வருமான வரி கழகத் தலைவர் பி.சி. மோடி ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி இருவரும் இன்று நேரில் ஆஜராகி வருமான வரி சோதனை குறித்து விளக்கமளிக்கவுள்ளனர்.

Exit mobile version