திருவாரூர் இடைத்தேர்தல் ஜனவரி 28 -ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு

திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜனவரி 28-ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

திருவாரூர் எம்.எல்.ஏவாக இருந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி, கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி காலமானார். இதனால் காலியாக இருந்த திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல், ஜனவரி 28-ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருவாரூர் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல், ஜனவரி 3-ஆம் தேதி தொடங்கும் என்றும் ஜனவரி 10-ஆம் தேதி கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுக்கள் ஜனவரி 11-ஆம் தேதி பரிசீலனை செய்யப்படும் என்றும் ஜனவரி 14-ஆம் தேதி வேட்பு மனுவை திரும்ப பெற கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 31-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version