பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட கர்ப்பிணி பெண் உள்பட 3 பேருக்கு வாந்தி மயக்கம்

ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட கர்ப்பிணி பெண் உள்பட 3 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ராமேஸ்வரம் நகராட்சியில் ஒப்பந்த ஊழியர் பணியாற்றும் ஒருவர், அருகில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் காலை உணவு வாங்கி, அலுவலகத்தில உள்ள ஒப்பந்த ஊழியர்கள் 3 பேருக்கு கொடுத்துள்ளார். உணவை பிரித்து சாப்பிட்டு கொண்டிருந்தபோது, சாம்பாரில் பல்லி ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதனைக் கண்ட மூன்று பேரும், அதிர்ச்சி அடைந்த நிலையில், அவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் கவிதா என்பவர் கர்ப்பிணியாவார். இந்த சம்பவம் குறித்து ராமேஸ்வரம் நகராட்சி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version