ஈஸ்டர் பண்டிகை: கிறிஸ்தவ மக்களுக்கு ஆளுநர்,முதலமைச்சர் வாழ்த்து

இயேசுபிரான் உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் திருநாள் இன்று கொண்டாடப்படப்படுவதை முன்னிட்டு, கிறிஸ்தவ மக்களுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தியாகத்தின் மறுவுருவமான இயசுபிரான் உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடும் கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் உளம் கனிந்த ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.இந்த புனித நாளில், உலகெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும் நிறையட்டும் என்றும் சகோதரத்துவம் தழைக்கட்டும் என்றும் இறைவனை பிரார்த்திப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கிறிஸ்துவ மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இயேசு உயிர்த்தெழும் தினமான புனித ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் கிறிஸ்துவ மக்கள் அனைவரும், அன்பு, கருணை, நம்பிக்கை, நேர்மை மற்றும் உண்மையை உணர்ந்து மனித நற்பண்புகளுடன் வாழ வாழ்த்துவதாக குறிப்பிட்டுள்ளார்.  

Exit mobile version