பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கமாக டெல்லி, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் லாகூருக்கு வடமேற்கே 173 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையப் புள்ளி அமைந்திருந்ததாக, இது ரிக்டர் அளவுகோலில் ஆறு புள்ளி மூன்று ஆகப் பதிவானதாகவும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், டெல்லி ஆகிய மாநிலங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. லேசான நில அதிர்வுதான் ஏற்பட்டுள்ளது என்றாலும் மக்கள் பெரும் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் பாகிஸ்தானில் பெருமளவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்.