நியூசிலாந்தில் பூகம்பம்..7.1 ரிக்டர் பதிவு..சுனாமிக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..!

நியூசிலாந்து நாட்டின் தீவுகளில் உள்ள கெர்மேடக் தீவுகளில் இன்றைக்கு 7.1 ரிக்டர் அளவிற்கான பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இந்த பூகம்பமானது சுனாமிக்கான அறிகுறி என்று யுனைட்டட் ஸ்டேட்ஸ் ஜியாலஜிக்கல் சர்வேயானது தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளது. நில அதிர்வுகளின் மதிப்பானது நிலப்பரப்பில் இருந்து 10 கிமீட்டர் ஆழத்தில் நிகழ்ந்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது. சிறிது நாட்களுக்கு முன்பு 6.9 ரிக்டர் அளவிற்கு சுனாமி ஒன்று இதே பகுதியைத் தாக்கியிருந்தது. ஆனால் அது 183 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது என்பதால் பெரிதாக பாதிப்பு எதுவும் இல்லை. இருப்பினும் அன்றே நாட்டு மக்களுக்கு  ஒரு எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

நியூசிலாந்து நாடானது ஒரு தீவாக இருப்பினும் அது முக்கியமாக இரண்டு கண்டத்திட்டுகளுக்கு  மையத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் பசுபிக் பெருங்கடலின் கண்டத்திட்டுகள் பிரியும் இடத்தில் சரியாக அமைந்துள்ளது.  புவியானது அழுத்தத்தின் காரணமாக  கண்டத்திட்டுக்களை நகர்த்தும் சூழல் ஏற்படும்போது அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. இதனால் நியூசிலாந்து அடிக்கொருமுறை பாதிக்கும் சூழல் நிலவுகிறது. முக்கியமாக த ரிங் ஆப் பயர் என அழைக்கப்படும் எரிமலைகள் அமைந்துள்ள பகுதி நியூசிலாந்தில் இருந்து சரியாக 40,000 கிமீ தொலைவில் உள்ளது. கிட்டத்தட்ட 452 செயல்படும் எரிமலைகள் இந்தப் பகுதியில் காணப்படுகிறது.

Exit mobile version