நியூசிலாந்து அருகே கடலுக்கு அடியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் அதிகம் வசிக்காத கெர்மடெக் தீவின் வட பகுதியில் இந்த நிலடுக்கம் ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்து நாட்டின் டாரங்கா நகரில் இருந்து 929 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கமானது, ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளி 4 ஆக பதிவாகியுள்ளது. இதையடுத்து கடலோர பகுதிகளில் கடுமையான சுனாமி அலைகள் உருவாக வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டனர். சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு மற்றும் பொருட்சேதம் குறித்து தகவல் வெளியாகவில்லை.