மியான்மர் மற்றும் வடகிழக்கு மாநிலமான நாகலாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
மியான்மரில் காலை நேரத்தில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.1 என பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதை அடுத்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். இதேபோல் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான நாகலாந்தில் உள்ள டியன்சாங் பகுதியில் இருந்து 132 கிலோ மீட்டர் தொலைவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.7 என பதிவாகியிருந்ததாக பூகம்பவியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது.