இந்தியாவின் ஒருசில பகுதிகளில் நள்ளிரவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
வங்க கடலில் அமைந்துள்ள நிகோபர் தீவுகளில் நள்ளிரவில் 4 புள்ளி 9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் உத்தரகாண்ட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3புள்ளி 8 ஆக பதிவானது. எனினும் இந்த நிலநடுக்கத்தினால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, நேற்று பிற்பகல், 4புள்ளி 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் நேபாளத்தில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட 12 மணி நேரத்தில் உத்தரகாண்ட் மற்றும் நிகோபர் தீவில் நிலநடுக்கம் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.