அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம்

அந்தமான் தீவுகளில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0ஆக பதிவானது.

அந்தமான் தீவுகளில் இன்று காலை 7.24 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால், அங்குள்ள கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால் பதற்றமடைந்த மக்கள், சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் பொருட்சேதமோ உயிர்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.

Exit mobile version