ஜப்பானில் உள்ள ஹோக்கய்டோ தீவில் 5.9 ரிக்டர் நிலநடுக்கம் – வீடுகள் குலுங்கியதால் மக்கள் வீதிகளில் தஞ்சம்

ஜப்பானில் உள்ள ஹோக்கய்டோ தீவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின.  ஜப்பானில் உள்ள ஹோக்கய்டோ தீவில் 5.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர். பூமிக்கு அடியில் 8 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பெரியளவில் சேதம் ஏற்பட்டிருக்காது எனவும் கூறினர். இதே தீவில் கடந்த செப்டம்பரில் 6.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

 

Exit mobile version