நிலவில் பூமியின் பாறை – அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்

அப்பல்லோ 14, அமெரிக்க அப்பல்லோ திட்டத்தில் மனிதர் பயணித்த எட்டாவது திட்டமாகும். மேலும் சந்திரனில் தரையிறங்கிய மூன்றாவது திட்டம் இதுவாகும்.

திட்ட ஆணையாளர் ஆலன் ஷெபர்டு, கட்டளைக் கலன் விமானி ஸ்டூவர்ட் ரூசா, நிலவுக் கலன் விமானி எட்கர் மிட்செல் ஆகியோர் தமது ஒன்பது நாள் பயணத்தினை சனவரி 31, 1971 துவக்கினர்.

1971ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், நிலவில் 33 மணிநேரம் செலவிட்ட அப்போலோ 14 விண்கல விஞ்ஞானிகள், 43 கிலோ எடை கொண்ட பாறைகளுடன் பூமிக்கு திரும்பினர்.

அப்போலோ விண்கலம் நிலவில் சேகரித்த பாறைகளில், நானூறு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய பூமியின் பாறை இருந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த பாறை, நானூறு கோடி ஆண்டுகளுக்கு முந்தையது என்றும் கூறப்படுகிறது.

பூமிக்கு மிக நெருக்கமாக நிலவு இருந்த போது விண்கல் மோதி பூமியின் பாறை அங்கு விழுந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

Exit mobile version