அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு அடுத்த ஒரு ஆண்டுக்கு நிறுத்தம்!

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஈட்டிய விடுப்பு தொகை அடுத்த ஓராண்டுக்கு நிறுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு, அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஈட்டிய விடுப்பு தொகையை அடுத்த ஓராண்டு நிறுத்த, தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அதன் படி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஈட்டிய விடுப்பு சம்பளத்தை ஓராண்டிற்கு நிறுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக ஊழியர்கள், அரசு நிறுவன பணியாளர்கள், கூட்டுறவு பணியாளர்களுக்கும் இது பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈட்டிய விடுப்பு தொகை விடுவிப்பு குறித்து ஊழியர்களுக்கு ஏற்கனவே அனுமதி உத்தரவு வந்திருந்தால், அவை ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version