தமிழகத்தில் ரேஷன் பொருள் கடத்தலை தடுக்க 20 கோடி ரூபாயில் இ-மானிட்டர் திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட இருக்கிறது.
அனைத்து சிவில் சப்ளை செயலாக்க குடோன், சேமிப்பு குடோன், தினமும் இயக்கப்படும் மூவாயிரம் லாரிகள் ஆகியவை ஜி.பி.எஸ் கருவி, சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. வாகனங்களின் இயக்கம் குறித்த விவரங்கள் காவல்துறையின் இணையதளத்துடன் இணைத்து கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம், கடத்தல் நடந்தால் சம்மந்தப்பட்ட குடோன், வாகனங்களை ஆதாரங்களுடன் பிடிக்க முடியும் என சிவில் சப்ளை அதிகாரிகள் தெரிவித்தனர். ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சர்க்கரை கடத்தல் முற்றிலும் தடுக்கப்படும் என கூறியுள்ளனர்.