ஈரோட்டில் உள்ள காலிங்கராயன் கால்வாயில், சாயக் கழிவுகள் கலப்பதாக வந்த புகாரை அடுத்து, அப்பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் சிவசுப்பிரமணி அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய பாசன கால்வாயாக விளங்கும் காலிங்கராயன் கால்வாய் மூலம் 14 ஆயிரத்து 700 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த கால்வாயில் சில ஆலைகள் சட்டவிரோதமாக சுத்திகரிப்பு செய்யப்படாத சாயக் கழிவு நீர் கலப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. அதனடிப்படையில், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சிவசுப்பிரமணி, காலிங்கராயன் கால்வாயை ஒட்டியுள்ள பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின் போது கால்வாயில், வழக்கமான சாயதண்ணீரை விட கூடுதலாக சட்டவிரோதமாக தண்ணீர் கலக்கப்படுவது கண்டறியப்பட்டது. தொடர்ந்து கால்வாயில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட ப ைப்லைன்களை அகற்ற உத்தரவிட்ட அவர், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட ஆலைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.